ராஜாசாரே கேட்டுவிட்டார்.... நமக்கு பிடித்த 4000க்கும் மேற்பட்ட பாடல்களில் 10 பாடல்களை மட்டும் தேர்வு செய்ய அனுமதி அளித்தார் என்ற வருத்தம் இருந்தாலும் நமக்கே நமக்குன்னு உள்ள சிறு ஆசைகளை நாம் தெரியபடுத்த வாய்ப்பு கிடைத்ததே என்று நினைக்கும் போது வருத்தம் மறைந்து சந்தோஷமாய் மாறியது..
சரி இப்போது பாடல்களை பார்ப்போம்...
ஓ வசந்த ராஜா...
இந்த பாட்டுக்கு எப்போதுமே என் இதயத்தில் தனி இடம் உண்டு.
இந்த பாட்டின் ஆரம்ப இசைக்காகவே இந்த பாட்டை எத்தனை முறைவேண்டுமானாலும் கேக்கலாம்....
இந்த பாடல் பதிவின் போது தலைவரின் அசைவுகளை... பூரிப்புகளை..மாயாஜாலங்களை மீண்டும் பார்க்க ஆசை
காதலின் தீபம் ஒன்று..
காதலின் முதல் படியில் நிற்கும் ஒரு இளைஞனின் உணர்வுகளை அப்படியே வெளிக்கொண்டுவந்து திரையிட்ட பாடல்
மீண்டும் நம் கண் முன்னே பாடப்பட்டால்...
மீண்டும் இழந்த காதல் வாழ்க்கையை ரசிகர்கள் நினைத்துபார்ப்பார்களே..
மீண்டும் மீண்டும் வா..
இந்த பாடலில் மனித குரலையே ஒரு பின்னனி இசைக்கருவியாக பயன்படுத்தியதை நேரில் பார்க்கும்போது ....
இப்படியெல்லாம் பண்ண்முடியுமா என்பதை ரசிகர்கள் உணரும்போது மெய்சிலிர்க்குமே...
இஞ்சி இடுப்பழகி...
கலைஞானியும் இசைஞானியும் இணைந்து படைத்த காவியம்...மறக்க மனம் நினைத்திடுமோ...
நினைக்க மனம் துடிக்கும்போது...
நானொரு சிந்து காவடி சிந்து...
இசைகருவிகளோடு சித்ரா அவர்களின் குரலும் ஒரு இசைக்கருவியாக பயண்படுத்த பட்ட இந்த பாடலை சித்ரா அவர்கள் பாடுவதையும் தலைவர் இசைஅமைப்பதையும் காண கண்கோடி வேண்டும்
சொந்தம் ஒன்றை தெடும் அன்னகிளி..
மக்கள் நாயகன் ராமராஜன்,மனோ சித்ரா ஜோடி மற்றும் நம் தலைவருக்காக இந்த பாடல் ...சிங்கார சென்னையில் கிராமத்து மணம் வீச வேண்டாமா..
ஏ ஆத்தா ஆத்தோரமா....
பாடல் மட்டும் விழாவில் பாடப்பட்டால் அதுவும் தலைவர் அனுமதித்தால் ...சென்னையே அதிரும் அளவுக்கு விசில் சத்தம் பறக்குமே...
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..
எத்தனையோ பாடகிகளை நமக்கு தெரிந்து கொள்ளமுடியாதபடி செய்தவர் ஜானகி அம்மா....இவரின் குரலுக்கும்..அற்புதமான இசைக்கோர்வைக்கும் அத்தனை இதயங்களும் அடிபணிவதை பார்க்க தூண்டுகிறதே
தண்ணிகருத்திருச்சி தவளை சத்தம்...
மறைந்த நம் ஆஸ்தான பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு மரியாதை வேண்டாமா?
அவருடைய இந்த பாடலை விரும்பாத மனமும் உண்டோ..
சின்ன பொன்னு சேலை...
தலைவர் குரலில் ஒரு டூயட் பாடல் வேண்டாமா..அதுவும் இந்த பாடலை தலைவர் பாடுபோது அவரின் முக பாவனைகளை நாம் பார்த்து ரசிக்கவேண்டாமா?
பரிசு கிடைக்கிறதோ இல்லையோ....
என்னோட ரசனை உங்கள் ரசனையோடு ஒத்துபோனால் அதுவே நான் செய்த பாக்கியம்..
அட்டகாசம்...பாடல் + வீடியோ போட்டு கலக்கிட்டிங்க ;-)
ReplyDeleteசுவையான வரிகளுடன் !
நன்றி கோபிநாத்..
ReplyDeleteநீங்க பத்து பாடல்கள் அனுப்பிட்டீங்களா?
நான் செலக்ட் பண்ணியதில் ஏதாவது உங்க tasteக்கு ஒத்து போனதா?