தம்பிக்கு ஒரு பாட்டு
1991இல் வெளிவந்த இந்த படத்தில் ரிஷி என்ற நாயகன் அறிமுகமாயிருக்கிறார். நடிகன் படத்தில் குஷ்புவுடன் இணை நடிகையாக வந்த பாலாம்பிகா கதா நாயகியாக நடித்திருக்கிறார்.சில்க் ஸ்மிதா கதா நாயகனுக்கு அக்காவாக நடித்திருக்கிறார்.
மேலும் ராதாரவி, SS.சந்திரன்,Y.G.மகேந்திரன்..மற்றும் பலர் நடித்திருக்கிற இந்த படத்தின் கதை ,திரைக்கதையை ஹரிஷ் கவனிக்க.. வசன்ம்,பாடல்கள் பொறுப்பை கங்கை அமரன் ஏற்றிருக்கிறார்.
ஆண்பாவம் ஜானி போன்ற மெகா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் அஷோக் குமார் இந்த படத்தில் ஒளிப்பதிவோடு படத்தை இயக்கியும் இருக்கிறார்.
இதையெல்லாம் நாம் இங்கெ எழுத முக்கிய காரணம் இசை நம் தலைவர் இசைஞானி இளையராஜா.
1991இல் தலைவரின் பெரிய படங்களால் காணாமல் போன சின்ன படங்களில் இதுவும் ஒன்று.
ஹீரோ selectionலேயே டைரக்டர் தோல்வி அடைந்திருக்கிறார். கதையும் ஒன்றும் பெரிதாக இல்லை.தலைவர் இசை மட்டுமே இந்த படத்தின் பெரிய விஷயம்.படத்தின் அத்தனை பாடல்களுமே நாம் கவனிக்க மறந்த பாடல்கள் .
தாயென்றும் தந்தையென்றும் என்று தலைவர் தன் சொந்த குரலில் ஆரம்பிக்கும் போதே "நானிருக்கிறேன் ரசிகா" என்று
நம்பிக்கையூட்டுகிறார்.படத்தின் ஒளிப்பதிவும் மிக அருமை.ஒளிப்பதிவும் தலைவர் இசையும் ஒன்றுக்கொன்று உரசிகொண்டே செல்கின்றன.
குறிப்பாக காதல்ர்கள் கொஞ்சிகொள்ளும் காட்சிகளில் தலைவர் பின்னனியில் "தைமாசம் கல்யாணம்" பாடலின்
ஹம்மிங்கை இசைக்க விடுவது மெய்சிலிர்க்க வைக்கிறது.
இன்னொரு காட்சியில் காதலின் பிடியில் காதலர்கள் தவிக்கும் போதும் அந்த ஹம்மிஙகை இசைக்க வைத்து
ராஜாவின் ராஜாங்கத்தை கண் முன்னே காட்டுகிறார்
படத்தின் முதல் பாடல் ...தாயென்றும் தந்தையென்றும் பாடல் தலைவரின் குரலில்...
படத்தின் கதா நாயகன் ஊர் சுற்றும் போது ஜாலியாக பாடும் பாடல்..
படத்தின் முக்கிய பாடல் தைமாதம் கல்யாணம் ..
ஜெயசந்திரனும் சுவர்ணலதாவும் பாடி இருக்கின்றனர்.
கேட்க கேட்க திகட்டாத பாடல்..
பாடலை பார்க்க மட்டும் தானா..கேட்க, தரவிறக்கம் செய்ய இல்லையா.. என்றால் இருக்கு அதுவும் இருக்கு..
இதையெல்லாம் பார்த்து விட்டு படத்தை பார்த்திருக்கலாமே miss பண்ணிட்டோமே என்று உங்களுக்கு தோன்றினால் அந்த
கவலையே வேண்டாம்
படத்தையே உங்கள் முன் திரையிடுகிறான் ராஜாரசிகன்..
இசையை உருவாக்கியவன் உலகம் மகிழ கொடுத்தான் ...அதை நான் பகிர்ந்த போது தலைவன் அனுபவித்த சந்தோஷம் இரட்டிப்பானது.
No comments:
Post a Comment