நம் தலைவரின் இசை நம்மை மட்டும் பாதிக்க வில்லை.
அது பக்கத்து மாநிலமான ஆந்திரா வையும் விட்டுவைக்கவில்லை.
அங்கேயும் நம் தலைவர் தனது ராஜ்ஜியத்தை நடத்தி இருக்கிறார். நமக்கு கிடைத்ததை அவர்களுக்கும் அவர்களுக்கு கிடைத்ததை நமக்கும் பகிர்ந்து அளித்திருக்கிறார். சில பாடல்களை நேரடியாகவும் சில பாடல்களில் சிறிது மாற்றங்களை செய்தும் கொடுத்திருக்கிறார் இளையராஜா.
இதில் இரட்டிப்பு சந்தோஷம் நமக்குதான்.ஒரே பாடலை எப்படி இரு வேறு சூழ்நிலைக்கு தலைவர் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை பார்த்து ரசிக்கலாம்.
நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு தெரியப்படுத்துவோம் என்ற எண்ணத்தில் உருவாக்க பட்டது தான் இந்த இங்கும் அங்கும் தலைப்பு.
இதில் இளையராஜாவின் ரசிகர்களின் பங்கையும் எதிர்பார்க்கிறேன். நம்ம தலைவர் தமிழிலும் அதெ பாடலை தெலுங்கிலோ அல்லது வேறு மொழிகளிலோ இசை அமைத்ததை நம் ராஜாரசிகன் இணையதளத்தின் வழியாக சுட்டி காட்டுங்கள். நமக்கு தெரிந்ததை உலகுக்கு தெரியபடுத்துவோம்.
உங்கள் பதிவுகளை அனுப்ப வேண்டிய முகவரி rajarasigan@live.com
ரசிகர்களின் படைப்புகள் அவர்கள் பெயரிலேயே வெளியிடப்படும்.
முதன்முதலாக ராமராஜனின் மஞ்சபொடி தேய்க்கையிலே பாடல்.
நம்ம ராமராஜனின் செண்பகமே செண்பகமே படத்தில் வரும் மஞ்சபொடி தேய்க்கயிலே பாட்டை நாம் எல்லோரும் அறிவோம்.அழகான பாடலை பால சுப்ரமணியம் அவர்கள் அமர்களமாக பாடி இருப்பார். கேட்க கேட்க திகட்டாத அந்த பாடல் இங்கே
அதே பாடல் தெலுங்கிலும் வந்திருக்கிறது.ராகவாவும் பனுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியாவும் நடிதுள்ளனர்.வம்சி இயக்கி இருக்கிறார். இவரும் நம்ம தலைவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுதிருக்கின்றனர்.
பால சுப்ரமணியமும் ஜானகி அவர்களும் கலக்கியிருக்கிறார்கள்.
இந்த பாடலும் சக்க போடு பொட்டிருக்கிற்து. நம்ம் பாடல் அங்கே.....
இனி நீங்கள் தொடருங்கள்.......

No comments:
Post a Comment