Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, August 30, 2011

SP.SHAILAJA Vs JENCY



SP.ஸைலஜா, ஜென்சி என்ற பாடகிகள் தலைவரின் இசைமாலையில் இருவேறு நிறம் ,மனம் கொண்ட பூக்கள்.
சிறு வயதிலேயே பாட வந்து விட்ட இவர்களின் குரல்கள் முற்றிலும் மற்ற பாடகிகளிடம் இருந்து மாறுபட்டு இருக்கிறது.
ஆனால் இவர்களின் குரல் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமையை கொண்டிருக்கிறது.


தலைவரை பொறுத்தவரை இவர்கள் இருவருமே ஏற்றதாழ்வில்லாத பாடகிகள்.
இவர்களின் கீச்சு குரல் நம்மையெல்லாம் கிரங்கவைத்திருந்தது மறக்கமுடியாதது.
இன்றும் ஆயிரம்.. ஆயிரம் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிற இவர்களின் பாடல்கள் அத்தனையும் பொக்கிஷங்கள்.



சாதாரண ரசிகர்களுக்கு இவர்களின் குரலை பிரித்து பார்க்கிறது என்பது கொஞ்சம் கடினம் .நம் ராஜாரசிகர்கள் எந்த பாடலை கேட்டாலும் இதை இவர் பாடியது என்று மிக சுலபமாக பாடல்களை பிரித்தெடுத்து விடுவர்.இருந்தாலும் இதையும் கொஞ்சம் பரிசோதித்து பாருங்களேன்.

இங்கே 12 பாடல்கள் கொடுக்கபட்டிருக்கின்றன.இவைகளில் திருமதி.ஜென்சி அவர்களின் தனிப்பாடல்களும்,திருமதி சைலஜா அவர்களின் தனிப்பாட‌ல்களும் ,இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களும் கலந்திருக்கின்றன.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் ஜென்சி பாடிய பாடல்களை அல்ல....சைலஜா பாடிய பாடல்களை தனியே எடுக்க வேண்டும்.
பின்னர் ஜென்சி அவர்களின் பாடல்களை பிரித்தெடுக்க வேண்டும்.பின்னர் இருவரும் பாடிய பாடல்கள்.


உங்கள் முடிவு கீழே கொடுக்கபட்டுள்ள முடிவுடன் மிக சரியாக பொருந்தினால் மிக்க சந்தோசம். நீங்கள் இசைஞானியின் இசையை அனுபவித்து வாழ்ந்திருப்பீர்கள்.

ஏதாவது ஒரு விடை தவறாக இருந்தாலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்


சரி பார்ப்போமா...
அனைத்து பாடல்களையும் உண்ணிப்பாக கேளுங்க‌







இப்பொழுது உங்கள் முடிவுகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்க‌

இதோ நம்ம சோதனைக்கான முடிவுகள்


சைலஜா அவர்கள் பாடிய பாடல்கள்

ஜானி-ஆசைய காத்துல தூது- பாடியவர் சைலஜா
கல்யாணராமன்-மலர்களிலாடும் இளமை-பாடியவர் சைலஜா
முரட்டு காளை-மாமன் மச்சான்-பாடியவர் சைலஜா
பொன்னு ஊருக்கு புதுசு-சோலை குயிலே காலை-பாடியவர் சைலஜா
தனிகாட்டு ராஜா-ராசாவே உன்ன-பாடியவர் சைலஜா


ஜென்சி அவர்கள் பாடிய பாடல்கள்

ஜானி-என் வானிலே- பாடியவர் ஜென்சி
முல்லும் மலரும்-அடிப் பெண்ணே-பாடியவர் ஜென்சி
நிறம் மாறாத பூக்கள்-இரு பறவைகள்- பாடியவர் ஜென்சி
புதிய வார்ப்புகள்-இதயம் போகுதே-பாடியவர் ஜென்சி
உல்லாச பறவைகள்-தெய்வீக ராகம்-பாடியவர் ஜென்சி




இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள்
நிறம் மாறாத பூக்கள்-ஆயிரம் மலர்களே என்ற பாடல் .



ஆயிரம் மலர்களே என்ற  பாடலை அவர்கள் இருவருமே பாடுவதை பாருங்களே


அந்த பாடல் திரையில் கலக்கிய விதம் இதோ





இது மட்டுமல்ல ...இதில் இவர்கள் இருவருமே பாடாத பாடலையும் இணைத்திருக்கிறேன்.
"ஆராதனை" என்ற படத்தில் வரும் இளம் பனி துளிர்விடும் நேரம் என்ற பாடல்தான் அது.
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஜென்சி அவர்கள் பாடுவதை போலவே இருக்கும்.

ஆனால் இந்த பாடலை பாடியவர் "பாடகி ராதிகா" என்பவராவார்.இவருக்கும் நம்ம சைலஜா,ஜென்சி போலவே குரலைமைந்தது வியக்கதக்கது.

மேலும் ஒரு சேதி

பாடகி ராதிகாவும் ஜென்சியும் இணைந்து "மெட்டி" என்ற படத்தில் கல்யாணம் என்னை முடிக்க‌ என்ற பாடலை பாடி இருக்கின்றனர்.
இந்த பாடலில் எது எவரோட குரல் என்பதை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.

கேட்டு பாருங்களேன்



இப்ப சொல்லுங்க உங்க முடிவை








 எல்லோருக்கும் எல்லாமும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். .அதுவும் இசைஞானியின் நுணுக்கங்கள் இசையை ரசிக்கும் ரசிகர்க்ளுக்கு தோண்ட தோண்ட‌ புதயலை போன்ற தாகவே இருக்கிறது என்றால் அது மிகையாகது.



Tell a Friend

3 comments:

  1. தல நல்ல பகிர்வு ;-)

    \\உங்கள் முடிவு கீழே கொடுக்கபட்டுள்ள முடிவுடன் மிக சரியாக பொருந்தினால் மிக்க சந்தோசம். நீங்கள் இசைஞானியின் இசையை அனுபவித்து வாழ்ந்திருப்பீர்கள்.

    ஏதாவது ஒரு விடை தவறாக இருந்தாலும் இசைஞானியின் இசையை மேலோட்டமாக அனுபவித்திருக்கிறீர்கள்.
    நிறைய இருக்கு தெரிந்துகொள்ள.\\

    தல நீங்களே சொல்றிங்க நிறைய இருக்கு தெரிந்துகொள்ள என்று அப்புறம் எப்படி ஏதோ ஒரு விடை தவறாக இருந்தாலும் கூட இசை தெயவத்தின் இசையை ரசிக்கும் ரசிகன் மேலோட்டமாக அனுபவிக்கிறான் என்று சொல்லமுடியும்.

    பதிவின் மூலம் சொல்லவரும் விஷயம் மிக நல்லது...ஆனால் அந்த 2 பத்திகளை தவிர ;-)

    ReplyDelete
  2. தவறு திருத்தபட்டது கோபி நாத்

    ReplyDelete
  3. ஆயிரம் மலர்களே மலருங்கள்”.......S P .சைலஜா +ஜென்சி +மலேசியா வாசுதேவன் )
    இந்த பாடலில் S P .சைலஜா ஆரம்ப ஹமீம் யுடன் ஆரம்பிப்பார். அந்த ஹமீம் ஒலியே அழகாக வந்ததாக இளையராஜாவே சொல்லியிருக்கிறார். . டைரக்டரோ திரைபடத்தில் SP ஷைலாஜாவின் இந்த ஹமீம் ஒலியை அவ்வபொழுது பின்னணியில் ஒழிக்க விட்டுருப்பார். S P .சைலஜா வின் ஆலாபனையை தொடர்ந்து ஜென்சியும்.அழகாக..ஆயிரம் மலர்களே.........வானிலே..வெண்ணிலா...........என்று பாட பின் சைலஜா “கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மலரலாம்... எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ? கால தேவன் சொல்லும்....” என்ற கண்ணதாசனின் வரிகளைப் பாடியபடி இரண்டாவது சரணத்தில் ஷைலஜா பாட்டினுள்ளே வருவார் அப்படியே அள்ளிக்கொண்டுப்போகும்.பின் இறுதியில் மலேசியா வாசுதேவன் பூமியில் மேகங்கள் ........என்று பாடுவார் .மூன்று பேரும் அழகாக பாடியிருப்பார்கள்.இந்த பாடல் காலத்தால் அழியாத ஒரு அமுத கீதம்
    S P .சைலஜா +ஜென்சி ஆகியோர் சம வயதுடைய பாடகிகள் இவர்களை ஏக காலத்தில் தமிழில் இளையராஜாவே அறிமுகப்படுத்தினார்.- 80-களில்....இனிமை... இந்த இரு குயில்களின் குரலும் வானொலிகளில் ஒலிக்காத நாளில்லை எனலாம் .
    சமீபத்தில் நண்பிகளான S P .சைலஜா வும் ஜென்சி யும் இனைந்து "இரு பறவைகள் எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து ..ஆயிரம் மலர்களே................என்று தொடங்கி அவர்களது இனிய மறக்கமுடியாத 80-களின் பாடல்களை இசைத்தார்கள் எனபது குறிபிடத்தக்கது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...