முன்பெல்லாம்..
என்ன ..இப்படி ஆரம்பித்தவுடன் ஏதொ ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் செல்ல போவதாக நினைத்துகொள்ள வேண்டாம்.
இதோ ஒரு 15 வருடங்களுக்கு முன் தான் செல்கிறேன்
என் ஊரை விட்டு 5km தூரம் வெளியே சென்றாலே இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்புக்கு பதிலாக வெயில் என ஐந்து பஞ்ச பூதங்களுடனும் விளையாடி நம் ஆசையை தீர்த்து கொள்ளலாம்.
சாலையின் இரு புறங்களிலும் பரந்து விரிந்து கிடந்த வயல் வெளிகள் , நீர் நிலைகள்,பறவைகள் எல்லாம் நண்பர்களாக துணைவர சைக்கிளில் சுமார் 40km தூரம் சென்றாலும் இயற்கையை பார்த்து மகிழ்கின்ற அந்த ரசனைக்கு மட்டும் சோர்வெ கிடைக்காது.
இவைதவிர மாலை நேர தென்றல் காற்று ,குயில் பாட்டு, நிலா வெளிச்சம்,மழைச்சாரல் என அத்தனை இயற்கை அம்சங்களும் நம் காலடியில் கொட்டிகிடந்தன.
அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அனுபவித்து வந்த நேரத்திலெயெ..
நம் முன்னே நம் கண்களை பிடுங்குவது போல்..இயற்கையை இந்த நாகரீகம் சின்னா பின்னாமாக்கி வருகிறதை நினைத்தாலெ மனக்கஷ்டம் நம்மை ஆட்கொண்டு பொய்விடுகிறது.
அழிந்து கொண்டிருக்கிற இந்த இயற்கை வளத்தை அழியா நினைவு களஞ்சியங்களாக மாற்றியவர்கள் நம் பாடலாசிரியர்கள்.
சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சூழ் நிலைகள் அமையும் போதெல்லாம்...
மண் வாசனை கமகமக்க இசையமைக்கும் நம் இசைஞானியொடு இணைந்து ..இயற்கையோடு காதலை இணைத்து ..அவர்கள் தந்த வரிகள் நம்மை அந்த பொற்காலத்துக்கெ அழைத்து செல்கின்றன.
நிலாவுக்கான பாடல்கள்..குயில் பாட்டுகான பாடல்கள் ஏற்கனவே தொகுக்க பட்டுவிட்டதால்..
தென்றல் காற்றுக்கான பாடல்கள் இங்கே தொகுக்க பட்டுள்ளன.தென்றல் நம்மை உரசுவதோடு இல்லாமல் நம் வாழ்க்கையின் அன்பு, பாசம், காதல், சோகம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளோடும் உரசி செல்வதை இந்த பாடல்கள்
தெரிவிக்கின்றன.
கேளுங்களேன் ..தென்றல் பாடல்களை
(பாடல்களை DOWNLOAD செய்ய முதலில் பாடலை play பண்ணுங்க ..down குறியிட்ட பட்டனை அழுத்துங்க Download என வருகிறதா.. அதை கிளிக் செய்யுங்க உங்க கம்ப்யூட்டரில் உள்ள 'C drive' இல் Download folderஇல் உங்க பாடல் ரெடி)
தென்றல் பாடல்களை பார்க்க இதோ வீடியொ தொகுப்பு..
தென்றல் காற்று என்ற தலைப்பின் கீழ் வந்த இந்த இன்னிசை மழை நம்மை ஆனந்தத்தில் நனைய விட்டிருக்கும் என நம்புகிறேன்
தல தெய்வம் ஒரு பாட்டு பாடுராரே அது என்ன படம்!
ReplyDeleteஅப்புறம் செம தொகுப்பு தூள் ;-)
ஈர விழி காயங்கள் கோபிநாத்...
ReplyDelete