புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப யுவன் சங்கர் ராஜா
அவர்கள் ஆனந்த் படத்திற்க்கு
மெட்டமைத்த விதம் இருந்தது.
தலைவரின் இளைய வாரிசு போல மூத்த வாரிசு கார்த்திக்ராஜா அதிக திறமைகள்
உடையவர்
(இது ஒரு
பதிவு)
தலைவரின்
இசை நுணுக்கங்கள் அனைத்தையும் அருகில் இருந்து கற்றவர்.சொல்லபோனால்
தலைவர் போல் நல்ல இசையை தரக்கூடிய இளைய இசையமைப்பாளர் இவர்தான் என்பது என் தாழ்மையான கருத்து.
இவர் இசையமைத்த பாண்டியன் படத்தில் இடம்பெற்ற பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாடல்தான் இவரை அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து பொன்னுமணி படத்தில் இடம்பெற்ற அடியே வஞ்சிகொடி,பாடலுக்கும் இவர்தான் இசை. இவரின் இசையில் தலைவர் பாடிய முதல் பாடல் இது.
தொடர்ந்து மாணிக்கம் படத்தின்
பாடல்களில் குறிப்பாக சின்ன பாடலாக தலைவரின் குரலில் வரும் என் அழகே
அமுதே என் கனியே கண்ணம்மா பாடலை கேட்டுகொண்டு இருந்தால் சாப்பாடே தேவையில்லை.
அந்த பாடலும் இறுதியில் வரும் கருப்பசாமி பாடலான வெட்டருவா வேலுக்கம்பு பாடலும் படத்திற்கு இசை கார்த்திக்ராஜாவா இளையராஜாவா என்று
கேட்கவைக்கும்.
இதேபோல் குடைக்குள் மழை படத்தின் பாடல்களும் பின்னணி
இசையும் தலைவரைத்தான் நினைவுப்படுத்தும்.
தன் அளவிற்கு அபார திறமை உள்ளவர் என்று தலைவரே பல பேட்டிகளில் சொல்லி
இருக்கிறார்.சரியான இவருக்கு ஏற்ற இயக்குனர்களும் சரியான வாய்ப்பு
கிடைக்காமலும் இவர் தனது திறமையை நிரூபிக்க முடியவில்லை.
இவரது இசையில் தலைவர் பாடி மாமதுரை படத்தில் இடம் பெற்ற மதுரைமதுரைதான்
பாடலுக்கு இணையாக எந்த் துள்ளலிசை பாடலும் நிற்க முடியாது.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாடு (கார்த்திக்) ராஜா
\\தலைவரின் இசை நுணுக்கங்கள் அனைத்தையும் அருகில் இருந்து கற்றவர்.சொல்லபோனால் தலைவர் போல் நல்ல இசையை தரக்கூடிய இளைய இசையமைப்பாளர் இவர்தான் என்பது என் தாழ்மையான கருத்து.\\\
ReplyDeleteஅப்படியே வழிமொழிக்கிறேன் ;-)
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
ReplyDeleteநேரம் வரும் காத்திருந்து பாடு (கார்த்திக்) ராஜா
Well said. . .