ஆயிரகணக்கில் நாட்களை கழித்து ஒரு நாள் இந்த பாடலை YOUTUBEஇல் பார்க்க நேர்ந்தது
என்னமோ தெரியவில்லை அடிககடி இந்த பாடலை பார்க்க தோன்றியது
நானும் பார்த்து வந்தேன்...மனசுக்குள் ஒரு சந்தோஷம்.
இனம் புரியாத ஈர்ப்பு இந்த பாடலின் மேல் எனக்கு.
இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம்
இசைஞானியின் பாதிப்பு என்க்குள் பூகம்பமாய் வெடித்ததை உணர்ந்தேன்.
ஒரு பெண்ணுக்குண்டான சந்தோஷத்தை இப்படி கூட பாட்டில் எடுத்து வர முடியுமா?
வயலினும் கித்தாரும் கலந்த கலவை முன்னரெ வரும் பொதே பட்டம்பூச்சிகளாக பெண் மனம் பறக்க போகிறது என்பதை
உணர்த்துகிறதே.
இந்த பாடலை பாடும் போது நடிக்கிற நதியாவின் அழகான முக பாவங்களை பார்க்கதூண்டுகிறதே.
எத்தனையோ முறை இந்த பாடலை பார்த்து விட்டேன் ....கேட்டும் விட்டேன்.
இந்த பாடலை பாடிய ஜானகி அம்மாவின் குரலை ரசிக்கின்ற அந்த இசைதாகம் மட்டும் அடங்கவே இல்லை.
"எதுவுமே வேண்டாம்... மனம் நிம்மதி மட்டுமெ பொதும்" என்று ஏங்கும் இரவு பொழுதில் ஒரு முறையாவது பார்க்காமல் நான் தூங்குவதெ இல்லை.
நீங்களும் பாருங்களேன்
இந்த பாடல் மட்டுமல்ல பதிவின் நோக்கம்...
இந்த பாடலை upload செய்த ராஜேஷ் என்ற நண்பரின் சேவையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை upload செய்து இருக்கிறார்.
http://www.youtube.com/user/RajsMed
நாம் கேட்பதற்கே அரிதான பல பாடல்கள் இங்கே வீடியோவாகவே இருக்கிறது.
மலைத்து போய் நின்றேன் என்றுதான் சொல்லவேண்டும்.
"நேரமிருந்தால் இங்கே செல்லுங்கள் ...
அப்படி சென்று விட்டால் மற்ற வேலைகளுக்கு உங்களால் நேரமே ஒதுக்க முடியாது."
நன்றி தல ;-)
ReplyDelete