Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, October 22, 2011

ராஜாரசிகனின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா-250வது பதிவு



(இங்கே கொடுக்கபட்டுள்ள வீடியோக்களும் அதை பற்றிய தனி குறிப்புகளும்
நிஜத்தின் கற்பனைகள் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.....வர்ணனையோடு  இந்த பதிவிற்காகவே EDIT செய்யபட்ட வீடியோவையும் பார்க்கதவறாதீர்கள்)


அன்பு ராஜாரசிகர்களுக்கு ...

வணக்கம். நமது ராஜாரசிகன் ,தனது இரண்டாம் வருட பயணத்தை முடித்து மூன்றாம் ஆண்டில்  தலைவர் இசைஞானி
யுடனான சுகமான பயணத்தை தொடர்கிறது.
இந்த சந்தோஷமான தருணத்தை மிக சிறப்பான விழாவாக  கொண்டாட ராஜாரசிகன் குழுவும் முடிவு செய்தது.விழாவுக்கான அரங்கமும்.. நாளும்.. நேரமும்.. முடிவு செய்யபட்ட பின்னர் விழாவுக்கான சிறப்பு
விருந்தினராக யாரை அழைப்பது என்பதில் மட்டும் குழப்பம் நீடித்தது.

நீண்ட நேர விவாததிற்கு பிறகு தலைவரின் மூத்த ரசிகனை அழைப்பதுதான் விழாவிற்கு பொருத்தமாகும் ...
விழாவிற்கும் சிறப்பு சேர்க்கும்..
என்று முடிவு செய்யபட்டது

அவர் நாயகன் ...உலக நாயகன்
அவர் எதிலும் வல்லவன் ...சகலகலா வல்லவன்
தலைவரும் இவரும் சகோதரர்கள்...அபூர்வ சகோதரர்கள்
அய்யர் ஆத்தில் பிறந்தாலும் இவர் ..தேவர் மகன்
தமிழில் இவர் கல்யாணராமன் ..இந்தியில் இவர் ஹேராம்.

நடிப்பு, நடனம், பாடகர், பாடலாசிரியர், கதை, திரைக்கதை,  வசனம், தயாரிப்பு, இயக்கம் என எல்லா துறைகளையும் தனிதனியாக கையாண்டு எல்லாவற்றிலும் வெறிபெற்று தானே கலை மகளின் தலைமகன் என்று பெரும் பெற்று..
உலகம் முழுதும் கலைத்தாக்கம் உள்ளவர்களிடம் கமல் தாக்கத்தை ஏற்படுத்தி..  கலைஞனாகவே பிறந்து கலைஞானியாக வாழ்ந்து உலகம் போற்றும் உலக நாயகனாக உயர்ந்த ...
எங்கள் காதல் மன்ன‌ன்
கமல்ஹாசன்..

அவர்தான் நம் ராஜாரசினின் இரண்டாம் ஆண்டின் நிறைவு விழாவின் சிறப்பு நாயகன்


இனி விழாவை பற்றி...


திட்டமிட்டபடி அனறு மாலை சரியான நேரத்திற்கு விழா துவங்கியது.மக்களோடு மக்களாக நாமும் தலைவர் அரங்கத்திற்குள் நுழையும் அந்த வினாடிக்காக காத்திருந்தோம்.வர்ணனையாளர்கள் தலைவரை புகழாரம் சூட்ட
அவருக்காக உருவாக்கபட்ட பாடல் ஒலிக்க தலைவரும் தன் வெண்ணிற ஜிப்பாவில் அரங்கத்திற்குள் உள்ளே நுழைந்தார்.

அந்த தருணம் அரங்கமே அதிர. அனைவரும் எழுந்து நின்று தலைவருக்கு மரியாதைசெலுத்தினர்
பாருங்கள் அந்த காட்சியை..







அடுத்து உலக நாயகன் சகலகலாவல்லவன் வருகிறார் என்றதும் ...அழைப்பு வாசலில் அவர் கார் வந்து நின்றதும் ,அவரை பற்றிய உயிரோட்டமுள்ள திரை தொகுப்பு திரையில் ஒளிரப்பட்டது.

அவரை பற்றிய சிறப்பு தொகுப்பும் அந்த நேரத்தில் அவர் அரங்கத்தினுள் நுழைவதையும் பாருங்கள்
பாருங்கள் அந்த கண்கொள்ளா காட்சியை..





கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மேடை ஏறிய தலைவர் உலக நாயகனை பேச அழைத்தார்..பாட மறுத்த உலக நாயகன் தாந்தான் கொடுத்து வைத்த ரசிகன் என்று அவர் வாயாலேயே சொல்வதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மெய்மறக்க கேட்டு இன்புற்றனர்

இதோ அந்த legends
 சந்தித்து கொண்ட காட்சி

 





முதலில் பாட மறுத்த கலைஞானி கமல்ஹாசன் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுதலால் பாடினார்.
உணர்ச்சி பொங்க பாடினார்.
மிகவும் மகிழ்வுடன் ..அழுத்தமாக அந்த பாடலை பாடும் ஒரு கணம் கமல்ஹாசன் பின்னோக்கி 1987 க்கே சென்றிருப்பார்
என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.


பாடலை பாடும் விதமே போதும் ..அவர் எந்த அளவுக்கு அந்த பாடலை நேசித்திருக்கிறார் என்பது புரியும்

பாருங்கள் அந்த மூத்த ரசிகன் பாடுவதை








இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக தயாரிக்கபட்ட விருமாண்டியின் பாடல் பதிவு காட்சி கலவைகளுடன் சேர்த்து திரையிடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.
கலைஞானி.. தலைவர் இசைஞானியின் இசையில் பாடி மகிழ்வதையும் ஆடி மகிழ்வதையும் பார்க்க மனம் சந்தோஷத்தில் மூழ்கியது

இதோ அந்த சிறப்பு வீடியோ






விழாவில் பங்கு கொண்ட திரு ஜேசுதாஸ் அவர்கள் கமல்ஹாசனை இஞ்சி  இடுப்பழகி பாடலை பாட சொல்லி கொஞ்சி
கேட்டது ஒருபக்கம்..
பாலா சார் தலைவருடன் அந்த பாடல் உருவான கதையை இசைஞானியுடன் நினைவு கொண்டது ஒரு பக்கம்...
ரசிகர்களுக்கு இசைமழையுடன் ஆனந்த மழை சேர்த்து கொடுத்தது இந்த விழா.





விழாவின் முடிவில் தலைவர்  கலைஞானியை வாழ்த்தி பேசினார்.வாழ்த்தி பாடினார் .தங்கள் இருவருக்கும் உள்ள உறவின் உயர்வை இந்த உலகத்தின் பார்வைக்கு வைத்தார்.உள்ளத்தின் வாழத்துக்கள் என்பதால் வாய்மொழி வார்த்தைகள் சரிவரவில்லையென்றாலும் உலக நாயகன் அனைத்தும் அறிந்தவராய் புன்னகைத்தார்.

 

இசைஞானியின் வாழ்த்துக்களுடன்..
ராஜாரசிகர்களின் சந்தோஷத்துடன்...
விழா நிறைவு பெற்றது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் நட்ட சிறு செடி இன்று பலரின் துணையுடன் சிறு மரமாகி காட்சியளிக்கிறது.
செடியை நட்டது மட்டும்தான் நான்..அதனை மரமாக்கியவர்கள் நண்பர்கள் Sriganesh,Abiram,Rajesh varadhan,Kamaraj,Nagaraj,Prince,Saravanan,Srinivasan
இவர்கள் அனைவருடனும் அடிக்கடி போனில் தகவல் பரிமாற்றங்கள் ...விவாதங்கள்...விமர்சனங்கள் என பல
நடந்துதான் ராஜாரசிகனை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றோம்.இவர்கள் ரசனையும் என் ரசனையும் ஒரே புள்ளியில்
இணைந்துதான் வியக்கதக்கது.இவர்கள் அத்தனை பேருமே ராஜாரசிகனின் வளர்ச்சியில் நெரிடையாகவெ பங்கு பெற்றவர்கள்.

தலைவரின்மேல் கொண்ட அன்பால் நம் ராஜாரசிகனில் இணைந்த 187 FOLLOWERகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன் .ஒவ்வொரு நாளும் ஒரு ரசிகன் இணைந்தால் கூட அன்று மனம் அடையும் சந்தோஷத்திற்கு
அளவே இருக்காது.கூடவே பொறுப்பும் கூடிவரும் என்பது உண்மை.இவர்களின் பங்கும் மறக்க முடியாதது.

மற்றும் தலைவரின் பாடல்கள்  YOUTUBEஇல் என்ற singamsoundar பெயரிலும் rajarasigan என்ற பெயரிலும் பதிவேற்ற பட்ட பாடல்களை கண்டு மகிவோருக்கும்  தன் மனம் விரும்பும் commentsகளை வழங்கும் ரசிகர்களுக்கும் என் இதயம் கணிந்த வணக்கங்களை
தெரிவித்து கொள்கிறேன்.

 ராஜாரசிகன் தற்போது FACEBOOKலும் இணைந்துள்ளது.ராஜாரசிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவடன் தொடர்ப்பு கொள்ள FACEBOOK மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்பதால்  ராஜாரசிகர்கள் அனைவரும் FACEBOOKலும் இணைவோம் என ஆவலோடு எதிர்பர்கிறேன்.
 
FACEBOOK இல் இணைய இங்கே கிளிக் செய்க








விருந்து

விழா முடிந்து விட்டது ..அப்புறம் என்ன? விருந்துதானே...அறுஞ்சுவை விருந்தாக கமல்ஹாசன் படங்களே இருக்கின்றன.தலைவருடன் அவர் இணைந்த படங்களில் கமல்ஹாசன் அவர்களே பாடிய பாடல்கள் மட்டும் இங்கே தனியாக எடுத்து விருந்து படைக்கிறேன்..கேட்டு ருசி பார்த்து விட்டு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை..

பாடல்களை கேட்க




பாடல்களை DOWNLOAD செய்ய.. 


   

இந்த பதிவை நான் தொடங்கியிருந்தாலும் முடிக்க வருபவர் நண்பர் கோபிநாத் ஆவார்.கடந்த ஒரு வருடமாக ராஜாரசிகனில் வெளிவரும் எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் தனது கருத்துரையை வழங்கி நம்மை ஊக்கபடுத்தி
வருகிறார். கருத்துரைகளே நம்மை சிந்திக்க வைக்கிறது.பதிவின் தரத்தையும் உயர்த்துகிறது.
ராஜாரசிகனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்பவரில் இவரும் ஒருவர்.அவருக்கு அனைவரின் சார்பாக நன்றியை
தெரிவித்து கொண்டு இந்த பதிவினை முடிக்கிறேன்.
நன்றி
வணக்கம்.

அன்புடன்
ராஜாரசிகன்`

4 comments:

  1. அருமை கற்பனை நிஜமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை சார்
    அபிராம்

    ReplyDelete
  2. ஆகா...! மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-))

    சூப்பர் கற்பனை தல...தூள் ;-)

    பாடல் தொகுப்புகளுக்கு ஒரு ஸ்பெசல் நன்றியும் கூட ;-)

    \\ராஜாரசிகனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்பவரில் இவரும் ஒருவர்.அவருக்கு அனைவரின் சார்பாக நன்றியை
    தெரிவித்து கொண்டு இந்த பதிவினை முடிக்கிறேன்.\\

    நானும் என்ன சொல்ல....நன்றியை தவிர !..இன்றும் என்றும் ராஜாரசிகனை தொடருவோம் தல ;-)

    ReplyDelete
  3. //அருமை கற்பனை நிஜமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை சார்//

    நம்ம கனவு பலிக்கட்டும் அபிராம் நன்றி

    ReplyDelete
  4. //இன்றும் என்றும் ராஜாரசிகனை தொடருவோம் தல ;-)//

    ஹா.....இது போதுமே கோபிநாத்...

    அடுத்த பதிவுக்கு தயாராகிட்டேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...