இசை மேதைகள் ஒன்று கூடிய தமிழகத்தின் மாபெரும் இசை திருவிழா நம் இசைஞானி அவர்களின் தலைமையில் கடந்த December 29ம் தேதி நடந்தது.
திரு.பாலமுரளிகிருஷ்ணா,திரு.பாலசுப்ரமணியம்,திரு.ஜேசுதாஸ்,சித்ரா,ஹரிஹரன்,தீபன் சக்ரவர்த்தி,யுவன்ஷங்கர் ராஜா,ஹரி சரண்,
பவதாரணி ,உமாரமணன ஆகியோர் நேரடியாகவும், பல முன்னனி டைரக்டர்கள், இளம் இசை அமைப்பாளர்கள், நடிகர்கள்
,பிரபலங்கள்அனைவரும் ரசிகர்களாகவும்,எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளே பல ஆயிரம் ரசிகர்கள்,வெளியே பல கோடி ரசிகர்கள் என களை கட்டியது திருவிழா.
இசை நிகழ்ச்சியை நேரில் காண கொடுத்துவைத்தவர்கள் அந்த நாளை தீபாவளியாய் கொண்டாடினார்கள்.ஜெயா தொலைகாட்சி அந்த நிகழ்ச்சியை உலக தமிழர்களுக்கு பொங்கல் விருந்தாக்கியது.
இதோ அந்த நிகழ்ச்சியின் முன்னொட்டம்.
இந்த முன்னோட்டமே நமக்கு பல ஆயிரம் கதை சொல்கிறது.
இந்த பொக்கிஷ நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் காண தவறிய நண்பர்களுக்காக இங்கே வீடியோக்கள் பதிவேற்றபட்டிருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியை காண துவங்கும் முன் ,இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த என் நண்பர் ,தலைவரின் தீவிர ரசிகனின் திரு கோபிநாத் அவரின் வலைப்பக்கத்தில் எழுதிய இந்த பதிவை படிக்க தவறாதிர்கள்.
இந்த பதிவு உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தரும் என்பது உறுதியே..
PART 1 -15ம் தேதி ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சி
PART 2 -16ம் தேதி ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சி
PART 3- 17ம் தேதி ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சி
நம் கோடைகால தென்றல் நம்மை தீண்ட போவதில்லை..ஆளப்போகிறது
நன்றி தல ;-))
ReplyDeleteசூப்பரு போங்க,
ReplyDeleteகோபியையும் போய் பார்த்தேன்!....“
நல்லாத்தான் எழுதியிருக்கு புள்ள.
நன்றி சௌந்தர்....
ReplyDeleteசூப்பரு போங்க!... அப்படியே போயி கோபியையும் பார்த்துட்டு வந்தேன்
நல்லாவே எழுதியிருக்கு.....
இன்னைக்கு நம்ம தெயவத்தோட நிகழ்ச்சி கனடாவுல நடக்க இருக்கு. அதையும் தாங்க.