ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றார்.
விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.
திரு.ஜெயசந்திரன் அவர்கள் திரு MSVசாரோட இணைந்து தன் இசை வாழ்க்கையை ஆரம்பிதிருந்தாலும் ..தலைவர் இசைஞானியோடு கைகோர்த்த பின்னரே அவரின் முழு சக்தியும் மக்களை சென்று சேர்ந்தது.
தலைவரோட இசையில் ..
1.கீதா சங்கீதா
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
3. மஞ்சள் நிலாவுக்கு
4.பூவ எடுத்து ஒரு
5.தாலாட்டுதே வானம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது
போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன்.
இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
பாலு சாரின் குரலுக்கும் மனொ அவர்களின் குரலுக்கும் உள்ள அதே வித்தியாசம் ஜேசுதாஸ் அவர்களின் குரலுக்கும்
ஜெயச்சந்திரன் அவர்களின் குரலுக்கும் இருக்கும்.பல பாடல்களை இவர் பாடினாரா இல்லை ஜேசுதாஸ் பாடினாரா என்று பிரித்தெடுப்பது சுலபமானது அல்ல.
யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன."வைதேகி காத்திருந்தாள்" படத்தின் பாட்டுக்களின் மூலம் இவர் புகழின் உச்சிக்கே சென்றார் எனலாம்.
இன்றும் தமிழ் மட்டுமல்லாது மலையாள மக்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது ஜெயச்சந்திரன் அவர்களின் தமிழ் பாடல்கள்..
திரு ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களை கேட்க...
(சில வினாடிகளில் பாடல்கள் தோன்றும்..அதுவரை காத்திருக்கவும்..)தரவிறக்கம் செய்து கொள்ள...
உள்ளம் கவர்ந்த பாடகனை ஒரு பதிவில் வருணிப்பது இயலாத
காரியம்..தொடர்வோம் இன்னொரு பதிவிலும்..
சூப்பர் தொகுப்பு தல ;-)) நன்றி
ReplyDeleteநன்றி கோபிநாத்..
ReplyDeleteSuper !
ReplyDelete